நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.
சில முக்கிய மின்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின்தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
இதன் காரணமாக தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த சில மணித்தியாலங்களிலும் தொடர்ச்சியாக கன மழை பெய்வதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஆறு மாவட்டங்களில் உள்ள 16 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
