மாத்தளை - வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை (15) இருவரும் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே காட்டு யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 56 வயதான தந்தையும் அவரது 25 வயதான மகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
