குழந்தைகளைத் தவிக்கவிட்டு காதலனுடன் சென்ற மனைவி ; கணவரின் அதிரடி முடிவுக்குக் குவியும் ஆதரவு

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஏழு வருட திருமண வாழ்க்கையையும், இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் விட்டு காதலனுடன் சென்ற பெண் ஒருவர், சில மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் கணவர் வீட்டிற்கு திரும்பிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண், குடும்பப் பொறுப்புகளைப் புறக்கணித்து காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் கடும் மனவேதனைக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காதலனுடனான உறவில் பின்னர் பிரச்சினைகள் ஏற்பட்டதையடுத்து, அந்த உறவு முறிந்ததாகவும், தங்குவதற்கு இடமின்றி அவர் மீண்டும் தனது கணவர் வீட்டிற்குத் திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடு திரும்பிய பெண், “நான் செய்த தவறை உணர்ந்துவிட்டேன். குழந்தைகளுக்காக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கணவரிடம் கண்ணீர் மல்கக் கோரியதாக கூறப்படுகிறது.

ஆனால், மனைவியை மீண்டும் ஏற்க மறுத்த கணவர், “ஒருமுறை துரோகம் செய்தவர்களுக்கு இந்த வாழ்க்கையில் மீண்டும் இடமில்லை” என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், “சுயநலத்திற்காக குழந்தைகளைத் தவிக்கவிட்டுச் சென்றவர்களுக்கு தற்போது தாய் பாசம் குறித்து பேச உரிமையில்லை” என்ற அவரது கருத்தும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் கணவரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

“மன்னிப்பு என்பது தவறு செய்தவர்களுக்குத்தான்; திட்டமிட்டு துரோகம் செய்தவர்களுக்கு அல்ல” என்றும், “உடைந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது கடினம்” என்றும் பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

அதேவேளை, சிலர் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இருவரும் சமரசம் காண வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment