யாழிலும் சிறுவன் பலி-கணவனையும் இழந்து-பிள்ளையும் இழந்து தவிக்கும் தாய்-பெற்றோர்களே அவதானம் தேவை

 

யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் உள்ள நீர்த்தடாகத்தில் ழூழ்கி சிறுவன் ஒருவர் பரிதாபமாக உரியிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது  (17.5.2026) இடம்பெற்றுள்ளது.

சிறு வயதில் தந்தையை இழந்த குறித்த சிறுவன் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பருத்தித்துறை புலோலி மேற்கு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவர். 

அவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் உடற் கூற்று சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment