நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு, தொலைந்த, தவறாக வைக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகள் தொடர்பான புகார்கள் தினந்தோறும் பதிவாகி வருவதாகவும், அத்தகைய சாதனங்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றால் அவை தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருடப்பட்ட அல்லது தொலைந்துபோன கையடக்க தொலைபேசிகள் பெரும்பாலும் சமூக விரோத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான தனிப்பட்ட மற்றும் நிதித் தரவுகளின் காரணமாக சில சமயங்களில் உரிமையாளர்கள் எதிர்பாராதவிதமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.