கதி கலங்கிய அண்டை நாடு-வானில் தூக்கப்பட்டு சுழன்ற மனித உயிர்கள்-சற்று முன் வரை 50 க்கும் மேற்பட்டோர் பலி

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வீசிய சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பயங்கரப் புயலால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் முற்றாக முடங்கியுள்ளன

இதற்கிடையில், பரேலி மாவட்டத்தில் புயலின் கோரப்பிடியில் சிக்கிய நபர் ஒருவர் சுமார் 300 மீட்டர் உயரம் வரை காற்றில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரேலியின் பாமியோரா கிராமத்தைச் சேர்ந்த நன்ஹே மியான் என்பவர், புயல் காற்றிலிருந்து தப்பிக்க ஒரு திருமண மண்டபத்தின் தகரத்தைப் பிடித்துக்கொண்டிருந்தபோது, காற்றினால் தகரத்துடன் சேர்த்து அவரும் வானில் தூக்கி வீசப்பட்டார்.

சுமார் 300 மீட்டர் தூரம் வரை காற்றில் இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்ததில், அவருக்கு கை மற்றும் கால்களில் பலத்த எலும்பு முறிவுகள் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத் திகிலூட்டும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Post a Comment