பொரளை பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் அதிகாலை நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பொரள்ளை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொரளை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே உயிரிழந்த நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதுக்கான மேலதிக விசாரணைகளை பொரள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
