கருவில் குழந்தையோடு தீயில் கருகி பலியான இளம் பெண்

 

கோழிக்கோடு செறுவண்ணூரில் கக்கறல்முக்கு பகுதியில் ஏற்பட்ட துயரமான கார் விபத்து, ஒரு குடும்பத்தின் அனைத்து நம்பிக்கைகளையும் சிதறடித்துள்ளது. 

சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றி, 6 மாத கர்ப்பிணியான சோனா என்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கருவில் வளரும் தங்கள் குழந்தையை மருத்துவரிடம் பரிசோதனைக்குக் காட்டிவிட்டு, மகிழ்ச்சியுடனும் பல கனவுகளுடனும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள் சோனாவும் அவரது கணவர் லாலுவும். ஆனால் அந்தப் பயணம் இப்படிப் பேரதிர்ச்சியில் முடியும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது.

 காரில் புகை எழுவதைக் கண்டு கணவர் லாலு எப்படியோ வெளியே தப்பித்தார். ஆனால் காரின் கதவுகள் லாக் ஆகிவிட்டதால், பின்பக்க இருக்கையில் இருந்த சோனாவால் வெளியே வர முடியவில்லை.

அவரை காப்பாற்ற பொதுமக்கள் எவ்வளவோ முயன்றாலும், விதி வேறுவிதமாக இருந்தது. சில நிமிடங்களிலேயே கார் முழுவதும் தீக்கிரையாகிவிட்டது. 

இறுதியில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அந்தத் தாயும் இன்னும் பிறக்காத குழந்தையும் உயிரிழந்துவிட்டனர்.  




Post a Comment