யாழ்ப்பாணம் கண்டி பாதையில் (ஏ9 பாதையில்) கொக்காவிலுக்கும் முறுகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கிய காரில் பயணம் செய்த ஒருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் காயமடைந்த இருவர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
