மதுபானசாலைகளுக்கு பூட்டு-இலங்கை பெருங்குடிமகன்களுக்கு சற்று முன் வெளியான அறிவிப்பு

 

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்கள் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், மே 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என்று கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த நாட்களில், கலால் உரிமச்சட்டங்களை மீறி செயல்படும் மதுபானசாலைகள் மற்றும் சட்டவிரோதமாக மதுபானம் விற்கும் இடங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment