புதன் பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

 வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார்.

மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாகவும் அறியப்படுகிறார். குறுகிய காலத்திலேயே தனது நிலையை மாற்றக்கூடிய தன்மை கொண்ட புதன், மே 15 ஆம் திகதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார்.

ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனின் ராசியில் புதன் நுழைந்திருப்பது முக்கியமான கிரக மாற்றமாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது. இந்த கிரக நிலை மாற்றத்தின் தாக்கம் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் காணப்படும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் பலன்கள் கிடைக்கக்கூடிய நிலையில், மற்ற சிலருக்கு வாழ்க்கையில் சவால்கள் மற்றும் தடைகள் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

புதனால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் எந்த அவசர முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். தொழிலிலும் பல அழுத்தங்கள் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைத்தால், எந்தவொரு செயலிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் ஒருங்கிணைப்பை பேண வேண்டும். எதையும் பொறுமையாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
சிம்மம் புதன் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் தவறான புரிதல்களும் தகவல் தொடர்பு இடைவெளிகளும் பதற்றத்திற்கு வழிவகுக்கும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, பிரச்சனைகளை வரவழைத்துவிடும். அலுவலகத்தில் மற்றவர்களுடன் வாக்குவாதங்கள் அல்லது தகராறுகளைத் தவிர்ப்பது நல்லது. முதலீடுகளையும் முக்கிய நிதி முடிவுகளையும் இப்போதைக்கு ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம் புதன் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வியாபாரம் அல்லது கூட்டாண்மைகளில் நம்பிக்கை தொடர்பான சவால்கள் எழக்கூடும். இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்திடும் முன் நன்கு படித்து பார்த்து முழுமையாக ஆராய்ந்து முடிவெடுக்கவும். இக்காலகட்டத்தில் உங்களின் வெளிப்படையாக பேசும் தன்மையும், புரிந்து கொள்ளும் விதமும் தான், உங்களுடைய மிகப்பெரிய பலங்களாக இருக்கும்.
 கும்பம் புதன் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் பண விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திடீரென்று செலவுகள் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு கிடைக்காமல் இழுபறியாகும். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். இக்காலத்தில் உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். சிறு விஷயங்கள் கூட உறவுகளில் விரிசலை ஏற்படுத்திவிடும். எனவே நன்கு சிந்தித்து பேச அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக எக்காரணம் கொண்டும். உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Post a Comment