வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை

 

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் – கொழும்பு பிரதான வீதி பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, மாதம்பே பகுதியில் வீதிகள் முழுமையாக மழைநீரால் மூழ்கியுள்ளதுடன், குதிரைக் கோவில் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனால், குறித்த வழித்தடத்தை பயன்படுத்தும் பயணிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும், அவசர தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், பயணத்தின் போது வாகன வேகத்தை குறைத்து பாதுகாப்பாக இயக்குமாறும், குறிப்பாக இரவு நேரங்களில் கூடுதல் அவதானத்துடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை தொடரும் அபாயம் காணப்படுவதால், வானிலை மற்றும் போக்குவரத்து தொடர்பான அறிவிப்புகளை தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

Post a Comment