யாழில் இப்படி ஒரு வீதியா-சிரமப்படும் மாணவர்கள்-நோய் வாய்ப்படும் மக்கள்-அலட்சிய போக்கில் பிரதேச சபை{படங்கள்}

 

வெள்ள நீர் தேங்கி நிற்பதால் மிகவும் சிரமத்தை எதிர் நோக்கும் கிராமம்.

இது குறித்து கிராம மக்கள் தெரிவிப்பதாவது;

மாதகல் சகாய புரத்தில் உள்ள பாலக்கட்டை வெள்ளவாய்க்கால் வீதியினை திருத்தி தரும்படி 2019ம் ஆண்டுக்கு முன்னரும்  கோரிக்கைக்கு கடிதம் கொடுத்திருந்தோம்.

இருந்தும் சண்டிலிப்பாய் பிரதேசபையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக  அவர்களால்  கூறப்பட்ட பதில் இவ்வீதி திருத்தம் செய்வது தொடர்பாக  எந்தவிதமான கோரிக்கைக் கடிதமும் தம்மிடம் இல்லை என்று  கூறினார்கள் . 

நாம் மீண்டுமாக இக்கடிதத்தினை  அவர்களிடம்  கொடுத்து திகதியிட்டு பிரதியினை பெற்றுக் கொண்டோம்.

இவ்வீதி திருத்தப் படாததால்  மீண்டும் மீண்டும் ஆக சென்று சென்று  ஏன் திருத்தம் செய்யப்படவில்லை என்று  கோட்டபோது.

இவ் வீதி தொடர்பான எந்தக் கடிதமும் தம்மிடம் இல்லை என்று கூறினார்கள்.

சரி வீதி தான் திருத்தப்படவில்லை பறவாய் இல்லை நாம் தந்த கடிதத்தின் பிரதி யாவது இருக்கா என்று கேட்டபோது அதுவும் இல்லை என்று கூறினார்கள்.

தகவலறியும் சட்டமூலமாக கேட்டிருந்தோம்.

அவர்களின் பதில் கடிதம் மூலமாக

பாலக்கட்டை வெள்ளவாய்க்காலை ஊடறுத்து  செல்லும் வீதி சரியான முறையில் அமைக்கப்படாததாலேதான்  வாய்க்கலுக்குள் வெள்ளம் ஓட முடியாமல்  தேங்கி நிற்கின்றது என்று கூறியதற்கு உடனடியாக  தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றுமாறு பிரதேச சபைக்கு கூறப்பட்டது .

இருந்தும் எந்தவிதமான வேலைகளும் இவ்வளவு காலமும்  நடைபெறவில்லை.

ஆனால் தாம் நீரை வெளியேற்றிவிட்டோம் என்று கூறியிருக்கிறார்கள் பிரதேச சபையினர்.

தேங்கி நிற்கும் வெள்ள நீரால் இரு சிறுவர்களும் ஒரு வயோதிபர் ஒருவரும் நோய்வாய்ப்பட்டுள்ளதாத கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த வெள்ள நீரில் தேங்கி நிற்கும் கழிவுகளால் அரிப்பு மற்றும் சிரங்குகளால் மாணவர்கள் மிகவும் அவஸ்தை படுகின்றனர்.

டெங்கு பரவக்கூடிய வாய்ப்பு மிக அதிகளவில் உண்டு என்பதை தெரிவித்த போதும் டெங்கு உருவான பின்னரே தம்மால் மருந்து அடிக்க முடியும் என அதிகாரிகளின் அலட்சிய பதிலாக இருக்கிறது.

நீண்ட காலமாக இவ் வீதியை புனரமைக்க போராடும் மக்களுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
























Post a Comment