4 வயது சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் ஆகும் வரை நாசம் செய்து கொலை செய்த மாமா

4 வயது சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் ஆகும் வரை நாசம் செய்து கொலை செய்த மாமா

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி இரவு ஷாலிமார் கார்டன் பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் நான்கு வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் உடலை கைப்பற்றி, பொலிஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

குழந்தையின் கழுத்திலும் பிறப்புறுப்புகளிலும் ஆழமான காயங்கள் உள்ளன. குழந்தை கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது தெளிவானது.

இந்நிலையில் இக்குற்றத்தைச் செய்தது குழந்தையின் மாமா ஜமீல் என்கிற சோட்டு என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது இந்த கொடூரத்தை செய்த ஜமீல், கொலைக்குப் பிறகு, சடலத்தை காருக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

அவனை உடனடியாக கைது செய்யக் கோரி உள்ளூர் மக்களும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் போக்சோ உள்ள பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜமீலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *