மோதிக்கொண்ட விமானங்கள்~கதறித்துடித்த பயணிகள்

மோதிக்கொண்ட விமானங்கள்~கதறித்துடித்த பயணிகள்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் தரையில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த ஆகாசா ஏர் விமானத்தின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் வலது இறக்கையும், ஆகாசா ஏர் விமானத்தின் இறக்கையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

விபத்தை தொடர்ந்து ஆகாசா ஏர் விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு, ஹைதராபாத் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பிலான முதற்கட்ட நடவடிக்கையாக ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஓட்டுநர்கள் மற்றும் பணியிலிருந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோரை விசாரணை முடியும் வரை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *