யாழ்ப்பாணம் – மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) முன்பாக முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எதிரேதிரே சென்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
