அயல் வீட்டு பெண்ணை அடித்து துவைத்த குடும்பம்-வெளியான அதிர்ச்சி காரணம்

அயல் வீட்டு பெண்ணை அடித்து துவைத்த குடும்பம்-வெளியான அதிர்ச்சி காரணம்

களுத்துறையில் தமது வளர்ப்பு நாய்கள் பட்டாசு சத்தத்தால் அச்சமடைவதாகக் கூறி, பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது அண்டை வீட்டார் நடத்திய கொடூரத் தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தாண்டு காலப்பகுதியில் மொரகஹஹேன பகுதியில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டுள்ளன.

புத்தாண்டு காலப்பகுதி

இதனால் தனது வளர்ப்பு நாய்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதாகக் கூறி, அந்தப் பெண் தனது அண்டை வீட்டாரிடம் அதனை நிறுத்துமாறு கோரியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அண்டை வீட்டார், அந்தப் பெண்ணைத் தடியால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த ஒருவரால் காணொளி எடுக்கப்பட்டு, இணையத்தில் பரவியது.

காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த மொரகஹஹேன காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். இத்தாக்குதலுடன் தொடர்புடைய வேல்மில்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஹோரண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *