எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து இலங்கையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து இலங்கையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள எதிர்வுகூறலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

மேலும் ஏப்ரல் 20 ஆம் திகதியிலிருந்து நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *