Posts

வானிலை எச்சரிக்கை: மக்களுக்கான அவசர அறிவிப்பு


இலங்கையைச் சூழவுள்ள பல கடல் பிராந்தியங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்றுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

எனினும், பின்வரும் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

காங்கேயன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பட்டி வரையான கடற்பரப்புகள் மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஏனைய கடல் பகுதிகள் ஓரளவிற்கு கொந்தளிப்பாக இருக்கும்.

சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் கடல் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே, மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment