Posts

இனி அரச அலுவலகங்களில் காத்திருக்கத் தேவையில்லை - விசேட சலுகை அறிமுகம்


அரச நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை சேவைகளை வழங்குவதற்காக, சிறப்பு அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சபை இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னில தலைமையில், இடம்பெற்ற நிகழ்வில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாற்றுத்திறனாளிகளை விளிக்கும்போது, பயன்படுத்தப்பட வேண்டிய சொற்களஞ்சியத்தை உத்தியோகபூர்வ மொழிகள் திணைக்களத்துடன் இணைந்து வெளியிடவும்  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment