Posts

வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!


பயனர்களின் தனியுரிமையை (Privacy) மேலும் பலப்படுத்தும் நோக்கில், புதிய Username வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இதன் உலகளாவிய வெளியீட்டிற்கு முன்னதாக, பயனர்கள் தங்களுக்குப் பிடித்த யூஸர்நேம்களை இப்போதே முன்கூட்டியே பதிவு செய்து (Reserve) கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொடர்புகள், குரூப் சாட்கள் மற்றும் வணிக நிறுவனங்களுடன் இனி உங்கள் தொலைபேசி எண்களைப் பகிராமலேயே, இந்த யூஸர்நேம் மூலம் பாதுகாப்பாக அரட்டை அடிக்கலாம்.

அத்துடன் உலகளவில் 300 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளதால், தங்களுக்குப் பிடித்த பெயர்களை உடனே முன்பதிவு செய்ய வாட்ஸ்அப் வாய்ப்பளித்துள்ளது. 

விருப்பமான பெயர் கிடைக்காவிட்டால், 'யூஸர்நேம் ஜெனரேட்டர்' மூலம் புதிய பெயர்களை உருவாக்கலாம்.

படைப்பாளிகள் (Creators) மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் யூஸர்நேம்களை வாட்ஸ்அப்பிலும் அப்படியே பயன்படுத்தி, தங்கள் அடையாளத்தை மாற்றாமல் வைத்துக்கொள்ளலாம்.

பொதுவான தேடல்கள் (Public Directory) மூலம் யாரும் உங்களைக் கண்டறிய முடியாது.

உங்களின் சரியான யூஸர்நேம் தெரிந்தால் மட்டுமே உங்களைத் தொடர்புகொள்ள முடியும்.

கூடுதலாக "யூஸர்நேம் கீ" (Username Key) என்ற கட்டுப்பாட்டு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

உங்களின் வாட்ஸ்அப் செயலியை (App) அண்மைக்கால பதிப்பிற்கு (Latest Version) அப்டேட் செய்து, Settings > Account > Username பகுதிக்குச் சென்று உங்களுக்கான பிரத்யேக பெயரை இப்போதே பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த வசதி வரும் மாதங்களில் படிப்படியாக அனைத்து நாடுகளிலும் முழுமையாக நடைமுறைக்கு வரும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment