Posts

எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்


அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே மீண்டும் வெடித்துள்ள மோதல்களைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன.

வாரயிறுதியில் இரு நாடுகளும் பரஸ்பரம் நிகழ்த்திய தாக்குதல்கள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் (Strait of Hormuz) கடல்வழிப் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதன் காரணமாக, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் (Brent crude) விலை இன்று காலையில் சுமார் 0.9 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 73.21 டொலராக வர்த்தகமாகிறது.

இதேவேளை, உலகளாவிய இந்த பதற்ற நிலை ஆசியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. 

குறிப்பாக டோக்கியோ மற்றும் சியோல் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியைக் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment