பாடசாலைகளுக்கு விடுமுறை-18 சிறுவர்கள் பலி

 

ஐரோப்பாவைத் தாக்கியுள்ள கடுமையான வெப்பநிலை காரணமாக, பிரான்சில் கார் ஒன்றிற்குள் இருந்த இரு சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

அங்கு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலை நேர அட்டவணைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அதேவேளை, பிரித்தானியாவில் நேற்று (22) பதிவான வெப்பநிலை, வரலாற்றுப் பதிவுகளை முறியடித்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

பிரான்சின் ஒயின் உற்பத்தி பிராந்தியமான போர்டோ (Bordeaux) நகரின் வெப்பநிலை 41.9 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளதுடன், இது கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பதிவான சாதனையை முறியடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. 

அத்துடன், 1947ஆம் ஆண்டு பதிவாகியிருந்த அதிகபட்ச வெப்பநிலையை முறியடித்து, பிரான்சின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பொயட்டியர்ஸ் (Poitiers) நகரின் வெப்பநிலை 41.2 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.

Post a Comment