24 மணித்தியாலத்திற்குள் மகிந்தவை கைது செய்யலாம்!

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்படாவிட்டால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது சரத் பொன்சேகா மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர திசாநாயக்க உட்பட இந்த அரசாங்கம் எவ்வளவுதான் பெருமை அடித்துக் கொண்டாலும், மகிந்த ராஜபக்சவுக்கு தண்டனை வழங்கப்படாவிட்டால், தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டை கட்டியெழுப்பியுள்ளார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

இந்த நாட்டிற்கான கடமையையும், சேவையையும் நிறைவேற்ற வேண்டும். இந்த அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்யும் தனது கடமையை, அதனை நிறைவேற்றும் நாளில் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இதுதான் யதார்த்தம். இதுதான் உண்மை.

நாங்கள் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், உண்மையைப் பேச நாங்கள் அஞ்ச மாட்டோம். 24 மணி நேரத்திற்குள் மகிந்த ராஜபக்சவைக் கைது செய்யலாம்.

மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை, அவர் தூக்கிலிடப்படுவதுதான் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.  

Post a Comment