வவுனியாவை உலுக்கிய சோகம்-20 வயது இளைஞன் பலி

 வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இருபது வயது இளைஞன் மரணம்.

நேற்று(02) மாலை 2.30 மணியளவில் வவுனியா குறிசுட்டகுளத்திலுள்ள காளிகோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரத்தை இயக்கிய போது எதிர்பாராத விதமாக அதில் சிக்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

விபத்து நடந்தவுடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிசுட்டகுளம் கனகராயன் குளத்தைச்சேர்ந்த கஜேந்திரன் குகப்பிரியன் 

20 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment