இன்று 03 ஜூன் 2026 வைகாசி மாதம் 20ம் தேதி புதன் கிழமை, தனுசு ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று புதன் பகவானின் அருளும், கடகத்தில் குருவின் சஞ்சாரம் அற்புதமான பலனைத் தரும் நாள். இன்று ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம் ராசி பலன்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணிச்சூழலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு அஞ்சாமல், உங்கள் முயற்சிகளை வெளிப்படுத்தவும். இன்று, அரசாங்கம் அல்லது நிர்வாக அமைப்பிலிருந்து வரும் சில மாற்றங்கள் உங்கள் தைரியத்தைச் சோதிப்பதாக அமையலாம். எந்தவொரு சட்டச் சிக்கலிலும் மாட்டிக்கொள்ளாத விதத்தில் நிதானமாக செயல்படவும். அதே சமயம் பிரச்சனைகளிலிருந்து விலகி ஓடுவது நல்ல யோசனையல்ல. எந்தவொரு நிதி குறுக்குவழிகளையும் அல்லது ஊக வணிகத்தையும் தவிர்க்கவும். உங்கள் நிதி நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கான ஒன்றைச் சாதிக்க, நீங்கள் சிலரை சார்ந்திருக்க நினைப்பீர்கள். வேறொருவரின் உழைப்பின் பலனை அனுபவிப்பதை தவிர்க்கவும். இன்று, உங்களுடைய கடுமையாக உழைப்பு தேவைப்படும் சூழல் ஏற்படும். உங்களின் பரந்த பார்வையும் புதுமையான யோசனைகளும் பணியிடத்தில் பெரிதும் பாராட்டப்படும். புதிய மற்றும் தனித்துவமான யோசனைகள் பணியிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத் தரும். நிதி விஷயங்களில் ஒழுக்கம் உங்களை மன அழுத்தமின்றி வைத்திருக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் முதல் பாதியில் சில சிறிய ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பான சில பிரச்சனைகள் தீர்க்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். உங்கள் திறன்களில் நம்பிக்கை வைத்து செயல்படவும். எந்த ஒரு வேலை, தொழிலை சிறுமையாக நினைக்க வேண்டாம். மேலும் பிறரின் உணர்வுகளை மதித்து நடக்கவும். மாலைப் பொழுது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் கழியும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சமூக சேவை செய்வதில் மிகவும் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் கடின உழைப்பானது மிக விரைவான முன்னேற்றத்தைக் காண உதவும். நீங்கள் ஒரு வலுவான அமைப்போடு இணைந்து செயல்பட சிறப்பான ஒரு நாளாக இருக்கும். இக்காலகட்டத்தில், உங்களுக்குப் பல புதிய வாய்ப்புகள் உருவாகும்; இவை உங்களுக்குப் பெரிதும் நன்மை பயப்பவையாக அமையும். சரியான ஆய்வு இல்லாமல் பெரிய முதலீடுகளைச் செய்வதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்க்கவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் கடின உழைப்பிற்கான பலன்கள் இப்போது உங்களுக்குக் கிடைக்கத் தொடங்கும். இன்று உங்கள் நிதி நிலைமை மேம்படும்; ஆடம்பரப் பொருட்களுக்காக அதிகமாகச் செலவு செய்ய நேரிடும். மேலும், உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் நீங்கள் மிகுந்த தாராள மனப்பான்மையுடன் நடந்துகொள்வீர்கள், அவர்களின் பல தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளவும் முன்வருவீர்கள். பணியிடத்தில், உங்களின்தலைமைத்துவத் திறன் தெளிவான பார்வையும் கடின பணிகளைக்கூட எளிதாக முடிக்க உதவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் மீது அதிகமான அக்கறை கொள்கிறீர்கள். அவர்களுடைய துயர் துடைக்க நினைப்பீர்கள். உங்களுடைய பணியில் ஞானம் செலுத்தி செயல்படவும். சரியான நேரத்தில் வேலையை முடிப்பதால் உங்களுக்கு போதுமான ஓய்வு நேரம் கிடைக்கும். குடும்ப பொறுப்புகள் மற்றும் வேலை தொடர்பாக அதிகம் சிந்திக்க வேண்டியது இருக்கும். இன்று உங்களுடைய பணி சூழல் சாதகமாக இருக்கும். இன்று கண் மூடி தினமாக செயல்படுவதும், பிறருக்கு வாக்குறுதிகள் அளிப்பதையும் தவிர்க்கவும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணிச்சூழலில் சற்று கடினமாக இருக்கும். குறிப்பாக வேலையை முடிப்பதில் பிறரை சார்ந்து இருக்க நேரிடும். உங்களுடைய சொந்த திட்டங்கள் மற்றும் கடின உழைப்பின் மூலம் பணிகளை முடிக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும். இது உங்களுடைய பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். இன்று பொறுப்பற்ற விதத்தில் அல்லது எதையும் ஆராயாமல் எந்த ஒரு பொருட்களையும் வாங்க வேண்டாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று, சில உணர்வுபூர்வமான மற்றும் நெகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படக்கூடும். உங்கள் இரக்க குணமும், தாராள மனப்பான்மையும் சில பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு. இது சில சமயங்களில் உங்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடும். இன்று எந்த செயலை செய்தாலும் சட்ட வரம்பிற்குள் செய்வது அவசியம். வேலை மற்றும் தொழில் தொடர்பாக ஒரு வலுவான மற்றும் துல்லியமான செயல் திட்டத்தை நீங்கள் ஏற்கனவே வகுத்து வைத்துள்ளீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட காலத்திற்குப் பிறகு, இன்று உங்களுக்கு ஒரு நற்செய்தி வந்து சேரும். ஒரு முக்கியமான பணியை வெற்றிகரமாக முடிப்பது, உங்களுக்குப் பல லாபகரமான வாய்ப்புகளைத் திறந்துவிடும்; மேலும், இனி வரவிருக்கும் நல்ல காலத்தை எண்ணி நீங்கள் மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். மேலும், எங்கோ முடங்கிக்கிடந்த உங்கள் பணம், இன்றைக்கு மாலைக்குள் உங்கள் கைக்கு வந்து சேர்வது ஒரு நற்பேறாக அமையும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று, நீங்கள் பல்வேறு குழப்பங்களுக்குள் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய குடும்ப விஷயங்கள் அல்லது காதல் தொடர்பான சில கடினமான சூழலை எதிர்கொள்வீர்கள். இன்று ஏதேனும் ஒரு புதிய பொருட்கள் வாங்குவது அல்லது முதலீடு விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். பணியிடத்தில் வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும். வண்டி, வாகன பயன்பாட்டில் கவனமாக இருக்கவும். உங்களுடைய சுய சிந்தனை மற்றும் நிதானமான செயல்பாடு பெரிய அளவில் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் இலக்கை அடைய கடின உழைப்பு தேவைப்படும். இன்று உங்கள் செயல் மற்றும் பேச்சு பிறர் மனதை புண்படுத்தாத விதத்தில் பார்த்துக் கொள்ளவும். உங்களுடைய நீண்ட காலம் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியாக ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்வீர்கள். இன்று எந்தவிதமான வதந்தி அல்லது போலியான விஷயங்களை நம்ப வேண்டாம். நிதிநிலை வலுப்படுத்த முயற்சியில் ஈடுபடவும். பேச்சில் இனிமையை கடைபிடிக்கவும்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று கடந்த சில காலமாகவே சந்தித்த வந்த பிரச்சனைகள் தீரும். இன்று உங்கள் மனம் தனிமையை நாடும். உங்கள் சிந்தனையில் கவனம் தேவை. எந்த விஷயத்திற்காகவும் எரிச்சல் அடைவது அல்லது உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கவும். எதிர்வினை ஆற்றாமல் நிதானமாக செயல்பட வேண்டிய நாள். இன்றைய கிரகநிலை உங்கள் ராசிக்கு சுப நிகழ்ச்சிகள் மற்றும் சமூக பணிகளில் ஈடுபடும் ஆர்வத்தை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களுடைய மேலதிகாரிகளை கவரும் விதமாக புதிய சோதனைகளுடன் செயல்படுவீர்கள்.
