மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அபாய வலயங்களில் உள்ள மக்கள் தேவையேற்படின் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரத் தயாராக இருக்குமாறும் நிறுவனம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயத்தைக் குறைக்க பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
வீடுகளைச் சுற்றியுள்ள வடிகால் அமைப்புகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.
வீட்டிற்கு மேல்புறமாக சரிவுகளில் உள்ள பாரிய மரங்கள் அல்லது விழக்கூடிய நிலையிலுள்ள பொருட்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீட்டின் பின்புறம் உள்ள உயர்ந்த மண் மேடுகள் அல்லது சரிவுகளில் மழைநீர் நேரடியாக ஊடுருவாதவாறு பாதுகாப்பான நீர் திசைதிருப்பும் வழிகளை அமைக்க வேண்டும்.
கூரையிலிருந்து விழும் மழைநீர் நிலத்தில் ஒரே இடத்தில் தேங்காமல் முறையாக வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
