இலங்கையை சோகமாக்கிய இரு மாணவர்களின் உயிரிழப்பு-பெற்றோர்களே விழிப்புணர்வு அவசியம்

கொஸ்கம, தாவல்கொட பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த இருவரின் உடல்களும் கொஸ்கம, சாலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. 

சடலங்கள் மீதான மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

Post a Comment