பாப்பா என்கூட வா மாம்பழம் தரேன்.! 6 வயது சிறுமியை புதருக்குள் வைத்து சீரழித்த காமக்கொடூரன். 4 மணி நேரத்தில் நடந்த ஆக்சன். பயங்கர அதிர்ச்சி..!
UP Dist - இட்டாவா பகுதியில் 6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த குற்றவாளியைப் போலீசார் 4 மணி நேரத்திற்குள் என்கவுண்டர் செய்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாலை இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் உடனடியாக விசாரணையை முடுக்கிவிட்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சனிக்கிழமை மாலை அந்தச் சிறுமி செங்கல் சூளைக்கு அருகில் உள்ள மாந்தோப்பிற்கு மாம்பழம் பறிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவனுக்குக் காம வெறி கண் மறைத்துள்ளது. சிறுமியிடம் மாம்பழம் தருவதாக ஆசைவார்த்தை கூறி, அருகில் இருந்த புதர்களுக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அவனது பிடியில் இருந்து தப்பி ஓடிவந்த சிறுமி, அழுதுகொண்டே வீட்டில் நடந்த கொடூரத்தை விவரித்துள்ளார். பதறியடித்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்ற உடனே போலீசார், போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை வலைவீசித் தேடத் தொடங்கினர்.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், அடுத்த 4 மணி நேரத்திற்குள் குற்றவாளி போலீசாரிடம் சிக்கினான். விசாரணையில் அவனது பெயர் நிதின் (என்ற) பிரஹலாத் என்பது தெரியவந்தது. குற்றத்தை ஒப்புக்கொண்ட அவன், சம்பவத்தின் போது பயன்படுத்திய சாட்சியங்களை ஒரு இடத்தில் மறைத்து வைத்திருப்பதாகக் கூறினான்.
அதனடிப்படையில், சாட்சியங்களை மீட்பதற்காகப் போலீசார் அவனைக் குறிப்பிட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பியோடத் திட்டமிட்ட நிதின், சப்-இன்ஸ்பெக்டர் குல்தீப் சிங்கின் இடுப்பில் இருந்த அரசுத் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு சுட்டுவிடுவதாக மிரட்டித் தப்பியோட முயன்றான்.
குற்றவாளி தப்பியோடுவதைக் கண்ட போலீசார், தற்காப்பிற்காகவும் அவனைக் கட்டுப்படுத்தவும் உடனடியாகத் தங்களது துப்பாக்கியால் சுட்டனர். இதில் போலீசாரின் தோட்டா பாய்ந்து அவனது காலில் காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவனைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.
இதுகுறித்து பெண் டி.எஸ்.பி (CO) ஆயுஷி சிங் கூறுகையில், "குற்றவாளியிடம் இருந்து அரசுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காலில் காயமடைந்த அவனுக்குத் தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவன் குணமடைந்தவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு 4 மணி நேரத்தில் போலீஸ் அதிரடி ஆக்ஷன் எடுத்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
