அட்டுவாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில், தந்தை வீட்டுப் பொருட்களை வைக்கும் பரண் பகுதிக்கு மேல் ஏறியுள்ளார்.
அந்தச் சமயத்தில் அவரது 3 வயது மகன் கீழே விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
எதிர்பாராத விதமாக பரணின் பலகை உடைந்து, கீழே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் மீது விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த சிறுவனும், தந்தையும் உடனடியாக கம்பளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
