திருமலையை உலுக்கிய சோகம்-17 வயது இளைஞன் விபரீத முடிவு

 

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞன் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குடும்பத்தாருடன் வசித்து வந்த நிலையில் ஓரிரு நாட்களாக தனது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த இளைஞன் அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளில் தம்பலகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Post a Comment