வீதியோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதிய கார் ; பெண் பலி

வீதியோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதிய கார் ; பெண் பலி

தம்புத்தேகம – குருணாகல் பிரதான வீதியின் மெல்சிறிபுர, தஸ்ஹிந்த பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற கார் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தம்புத்தேகம நோக்கிப் பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்றிருந்த ஐவர் மீது மோதியதுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரின் பின் பகுதியிலும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வீதியோரத்தில் நின்றிருந்த இரு ஆண்கள், இரு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி என ஐவர் காயமடைந்ததுடன், விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியும் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், அங்கு சிகிச்சை பெற்றுவந்த 74 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த ஏனையவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மெல்சிறிபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *