சிகிச்சையின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள தகவல்

சிகிச்சையின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள தகவல்

சுகயீமுற்றிருக்கும்போது எனது ஆராேக்கியத்துக்காக பிராத்தித்த அனைவருக்கும் என மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எனது சுகவீனம் குறித்த செய்தி வெளியானவுடன், நலம் விசாரித்தும் நான் விரைவில் குணமடைய பிரார்த்தித்தும் எனக்குக் கிடைத்த தொலைபேசி அழைப்புகளும் செய்திகளும் எண்ணிலடங்காதவை.

எனது ஆரோக்கியத்திற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து மத வழிபாடுகளையும் முன்னெடுப்பதற்கு நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் எனது விசேட பாராட்டுக்குரியவை.

இலங்கைப் பிரஜைகளாக நீங்கள் மேற்கொண்ட இச்செயற்பாடுகள், நான் விரைவில் குணமடைவதற்குப் பெரும் தைரியமாக அமைந்தன.

குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் எனக்காகத் தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர் என்பதை நான் அறிவேன்.

என் மீது நீங்கள் காட்டிய அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் மீண்டும் மீண்டும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதற்காக எனது இதயபூர்வமான நன்றியினை இத்தருணத்தில் சமர்ப்பிக்கின்றேன்.

 

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *