பல வீடுகளில் கைவரிசையை காட்டியவருக்கு பொலிஸார் கொடுத்த அதிர்ச்சி

பல வீடுகளில் கைவரிசையை காட்டியவருக்கு பொலிஸார் கொடுத்த அதிர்ச்சி

பண்டாரகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கடந்த 21ஆம் திகதி பத்தேகொட பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 33 வயதுடைய சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேக நபர் 05 வீடுடைப்புத் திருட்டுகளுடனும், 02 சொத்துத் திருட்டுகளுடனும் தொடர்புடையவர் என கண்டறியப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் திருடப்பட்ட சொத்துக்களின் ஒரு பகுதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சொத்துக்களுள் தங்க ஆபரணங்கள், தங்க நாணயங்கள், மோட்டார் சைக்கிள் ஒன்று, தொல்பொருள் பெறுமதி வாய்ந்ததாகக் கருதப்படும் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் கைக்கடிகாரம் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்குகின்றன.

இதேவேளை, திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபர் நேற்று (26) பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாராவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அடலுகம பகுதியை சேர்ந்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பண்டாரகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *