இலங்கை வீதியில் வைத்து தாய் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல் தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்

இலங்கை வீதியில் வைத்து தாய் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல் தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்

சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, தாயார் ஒருவரை வீதியில் வைத்து மிலேச்சத்தனமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கொகரெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி கொகரெல்ல, மெதலந்த பிரதேசத்தில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இது குறித்து நாடு முழுவதும் அவதானம் திரும்பியது.

தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்த நிலையில், கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்ட விரிவான விசாரணைகளின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உறவினர்களுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறே இந்த மோதலுக்குக் காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *