Posts

பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

 


எதிர்வரும் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளன.

அதன்படி, தற்போது 30 ரூபாயாக காணப்படும் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 34 ரூபாயாக அதிகரிப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், 100 கிலோமீற்றர் வரையான பயணங்களுக்கான பேருந்து கட்டணங்கள் 12 வீதத்தினாலும், 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரப் பயணங்களுக்கான கட்டணங்கள் 20 வீதத்தினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment