ஏ9 வீதி கிளிநொச்சி ரெலிகொம் அருகிலுள்ள தொண்டமான் நகர் செல்லும் வீதிக்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை எஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவலறித்த பொலிஸார் உடனடியாக பேருந்து தரிப்பிடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். அத்துடன் உயிரிழந்தவரின் அடையாள அட்டையை வைத்து அவரது விலாசம் கண்டு பிடிக்கப்பட்டு சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தருமபுரம் 13ம் யுனிட்டை சேர்ந்த 53 வயதான நபரே சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
1990 அம்புலன்ஸ் வந்து பரிசோதித்த பின்னரே அவரது உடல் அகற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.
