இலங்கையை உலுக்கிய சோகம்-இரு இளம் பெண்கள் உட்பட மூவர் பலி-பெற்றோர்களே அவதானம்

 

நொச்சியாகம, தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், 24 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


நேற்று (06) மாலை 5:30 மணியளவில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்த மூவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment