பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சினால் புதிய 'ஆரோக்கியமான பாடசாலை சிற்றுண்டிச்சாலை வழிகாட்டி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மாணவர்களின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என அடையாளம் காணப்பட்டு, சிற்றுண்டிச்சாலைகளில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
உணவுகளின் பட்டியல் இதோ:
பதப்படுத்தப்பட்ட இறைச்சி - சொஸேஜஸ், மீட்போல்ஸ், பர்கர், ஹாட் டாக் மற்றும் பீட்சா.
அதிசர்க்கரை மற்றும் மாவு உணவுகள் - பேஸ்ட்ரிகள், டோனட்ஸ், பிஸ்கட் மற்றும் கேக் வகைகள்.
உடனடி உணவுகள் - இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், சூப் கட்டிகள் மற்றும் சுவையூட்டி தூள்கள்
இனிப்புப் பண்டங்கள் - சுவிங்கம், டொஃபிகள், லொலிபொப்ஸ், ஐஸ்கிரீம் மற்றும் புடிங்.
அதிஉப்பு பலகாரங்கள் - பூந்தி, மஸ்கட், தொடல், முறுக்கு மற்றும் 'டிபி டிப்' (Tipi Tip).
பானங்கள்- மென்பானங்கள், எனர்ஜி ட்ரின்க்ஸ், சுவையூட்டப்பட்ட பால் மற்றும் யோகட் பானங்கள்.
இனிவரும் காலங்களில், மாணவர்களின் விருப்பம் மற்றும் உள்ளூர் உணவு கலாசாரத்திற்கு ஏற்பவே உணவுப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.
அத்துடன், சிற்றுண்டிச்சாலைகள் கிருமிகள், பூச்சிகளற்ற சுத்தமான சூழலில் பராமரிக்கப்படுவதோடு, ஊழியர்கள் தனிப்பட்ட சுகாதாரத்தை மிக உயர் மட்டத்தில் பேணுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
