அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதில் நிலவும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய விசேட சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த இந்த யோசனை, மாணவர் சேர்க்கையில் முழுமையான வெளிப்படைத்தன்மையையும், அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்பையும் உறுதி செய்யவுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில், இம்முறை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் கல்வி அதிகாரிகளின் முக்கிய ஆலோசனைகளை உள்வாங்கி இந்த சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சேர்க்கை முறைகேடுகள் மற்றும் அநீதிகள் முற்றாகத் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விதிகளுடனான இந்த சுற்றுநிருபம், வரும் 2027 ஆம் ஆண்டு முதல் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்காக உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது.
