பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 2 வயது சிறுமி உயிரிழப்பு!


தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில், பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழுந்து இரண்டு வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள மற்றொரு வீட்டின் அருகே இருந்த, நீர் நிறைந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்துள்ளதாகக் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுமி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

சிறுமியின் சடலம் தற்போது தர்மபுரம் மருத்துவமனையின் சடல அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் காவல்துறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment