இலங்கையை அதிர வைத்த மற்றுமொரு கொலை-இளைஞன் பலி

 

வீரகெட்டிய, கிஞ்சிகுணே பகுதியில் நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹகுருவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

தனிப்பட்ட தகராறு ஒன்று முற்றியதன் காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

மேலும், இந்த மோதலின் போது சந்தேகநபரின் தாயாரும் காயமடைந்து வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மெதமுலன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

உயிரிழந்தவரின் சடலம் வீரகெட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வீரகெட்டிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment