பூட்டிய வீட்டிற்குள் இரண்டாவது மனைவியுடன் சடலமாக கிடந்த நபர் ; சந்தேகத்தில் பொலிஸார்

 களுத்துறை, புளத்சிங்கள எகல்லே ஓயா பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் தம்பதியரின் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

புளத்சிங்கள, ஏகல்ல ஓயா பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மேல் மாடியில், வாடகைக்கு தங்கியிருந்த நிலையில் தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வாடகை வீட்டில் வசித்து வந்த 62 வயது நபரும், அவரது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் 55 வயது பெண்ணும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனைவியின் உடலில் இரத்தக் கறை இருப்பதாகவும், அவரது உடல் துணியால் மூடப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்ட வீடு பல நாட்களாகப் பூட்டப்பட்டிருந்ததாகவும், இந்த மரணங்கள் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment