அளுத்கம, மொரகல்ல கடற்கரைப் பகுதியில் கடலில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகல்ல கடற்கரைக்கு அருகில் நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அளுத்கம பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இச்சம்பவத்தில் எஹெலியகொட பகுதியை சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் தனது நண்பர்களுடன் இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
