யாழை உலுக்கிய சோகம்-6 வயது சிறுவன் சடலமாக மீட்பு பெற்றோர்களே அவதானம்

 

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

நேற்று (12) இரவு இந்தச் சிறுவன் காணாமல் போயுள்ளதாகப் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சிறுவனின் சடலம் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் எனத் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருன்றனர்.

Post a Comment