5 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாதம்பே, கருக்குவட்டவ பகுதியைச் சேர்ந்த ஒருவரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.பாதிக்கப்பட்ட சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சந்தேகநபர் நடத்தி வரும் கடைக்குச் சென்றுள்ளார். இதன்போது, சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று குறித்த சந்தேகநபர் இந்த பாலியல் தொல்லையை இழைத்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
சிறுமியின் தாயாரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
