முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமல் வீரவங்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் இன்று (25) முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை கொழும்பு சம்பவம் தொடர்பில் இந்த அரசாங்கம் திங்கட்கிழமை தன்னை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
