யாழை உலுக்கிய சோகம்-4 மாத குழந்தை திடீர் உயிரிழப்பு

 

யாழில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) உயிரிழந்துள்ளது. வரணி - இயற்றாலை பகுதியைச் சேர்ந்த 4 மாதங்களேயான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட நிலையில் குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மேலும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Post a Comment