திருமலையில் ரகசிய தகவலில் சிக்கிய கணவன்-மனைவி-வெளியான அதிர்ச்சி காரணம்

 

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம்சேனை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவியை மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை இன்று(13.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூதூர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த பகுதியில் உள்ள சந்தேக நபர்களின் வீட்டைப் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் 7 இலட்சம் ரூபாய் பணம், கணவரிடமிருந்து 3.2 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், மனைவியிடமிருந்து 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நாளை(14) மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



Post a Comment