புத்தளத்தில் பதற்றம்-புதிதாக திருமணமான இளைஞன் சடலமாக மீட்பு

உடப்பு, பூனபிட்டிய களப்பில் இருந்து புதிதாக திருமணமான இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (12) மாலை இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம், உடப்பு, பெரியபாடு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

குறித்த இளைஞர் மீன்பிடிப்பதற்காகத் தனியாகப் பூனபிட்டிய களப்பிற்குச் சென்றிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்படி, குறித்த இளைஞர் தனது மிதிவண்டியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளதாகவும், அங்கு ஏதோ ஒரு காரணத்தினால் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment